
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் கௌதம்(10). இந்த சிறுவன் சின்னவேட்டுவபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கௌதம் தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ கடித்தது போல இருந்தது.
இதுகுறித்து கௌதம் சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். அந்த காயத்தை பார்த்த சதீஷ்குமார் கௌதமை பாம்பு கடித்திருக்கலாம் என நினைத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.