நேற்று தனியார் பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவன் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். நேற்று மாலை குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய பின், மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியானது.

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.