தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள போராடிய சூர்யா நந்தா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகராக உயர்ந்தார். அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்த சூர்யா தற்போது முன்னணி நடிகராக வலம் வருவதோடு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா திறமையான நடிகர் என்றாலும் அவர் நடனம் ஆடுவதில் சற்று சறுக்குவார் என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவியது.

இதற்கு தற்போது சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். அதாவது நடனம் ஆடுவதில் நடிகர் சூர்யா விஜய்க்கு நிகரானவர் என்று கூறி விஜய் மற்றும் சூர்யா பிரண்ட்ஸ் படத்தில் சேர்ந்து நடனமாடும் வீடியோவை தற்போது வலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ மற்றும் பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.