
ரஷ்யாவின் ஒரியோல் (Oryol) நகரில் பிறப்பு வீதம் குறைவடைந்த நிலையில், மக்கள்தொகையை அதிகரிக்க அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நகரத்தில் தற்போதைய மக்கள்தொகை வெறும் 8,000 பேர் மட்டுமே உள்ளதால், இளம்பெண்கள் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் (சுமார் ரூ.1 லட்சம்) அளிக்கப்படுவதாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரே நிபந்தனை, அந்த பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பதுதான்.
இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, பள்ளி மாணவிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், அவர்களுக்கு 100,000 ரூபிள்கள் (சுமார் 920 பவுண்டுகள்) வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எந்தவொரு குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை என்பதே முக்கிய அம்சமாகும், இது பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
ரஷ்யாவில் பிறப்பு வீதம் தொடர்ந்து குறைவாக உள்ளதால், எதிர்காலத்தில் ராணுவத்துக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அமலாக்கப்படுகின்றன. பெண்கள் எந்தவொரு வயதிலும் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றால், அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இரண்டு குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு வாழ்நாள் வரிவிலக்கையும் வழங்க ஐரோப்பிய நாடொன்றும் அறிவித்துள்ளது, இது ரஷ்யாவின் நடவடிக்கையையும் பிரதிபலிக்கிறது.