
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராக்கிசாவந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அதாவது இனி என்னால் தாய்மை அடைய முடியாது என்று நடிகை ரக்கிசாவந்த் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றேன்.
அவர்கள் பரிசோதித்ததில் எனக்கு மாரடைப்பு மற்றும் கருப்பையில் 10 சென்டிமீட்டர் கட்டியின் அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து. இதைத்தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.