
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ் கடன் வாங்கியுள்ளார்.
கடன் சுமை அதிகமானதால் எப்படி கட்டுவது என்று தெரியாமல் தத்தளித்த தங்கராஜ் தினமும் மனைவியிடம் புலம்பியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி விரைந்து வந்த போலீசார் தங்கராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கராஜின் இறப்பிற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.