
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் பிரையன் லாரா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 400 ஸ்கோர் அடித்த நிலையில் இதுவரை அவருடைய சாதனையை யாரும் தகர்த்ததில்லை. இப்படிப்பட்ட அவருடைய உலக சாதனையை முறியடிக்க சில குறிப்பிட்ட கிரிக்கெட் வீரர்களால் முடியும் என பிரையன் லாரா தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய காலத்திலேயே என்னுடைய சாதனையை உடைக்க சில வீரர்கள் முயன்றனர். அவர்கள் 300 ரன்கள் வரை கடந்து வந்தனர். இருப்பினும் அவர்களால் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. குறிப்பாக வீரேந்திர சேவாக், ஜெயசூர்யா, கிறிஸ் கெயில், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோர் என்னுடைய சாதனையை நெருங்கிய நிலையிலும் அவர்களால் அதை தகர்க்க முடியவில்லை. மேலும் இந்திய வீரர்களான யஷஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் சரியான பாதையை தேர்வு செய்தால் நிச்சயம் அவர்களால் என்னுடைய சாதனையை உடைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.