தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய செல்போன் அழைப்புகளை தமிழக அரசு ஒட்டு கேட்பதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கூட்டணி பற்றியும் எத்தனை சீட் என்பதை பற்றியும் யாரும் கவலைப்பட தேவையில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு போட வேண்டாம்.

இதைப் பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்து கொள்ளும். தமிழக அரசு என் செல்போனை ஒட்டு கேட்பதோடு யார் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே பாஜக கட்சியின் தொண்டர்கள் அனைவரும் செல்போனில் பேசும்போது எச்சரிக்கையாக பேசுவது நல்லது என்றார். மேலும் அவர் பாஜகவினர் செல்போன் அழைப்புகளை திமுக கேட்கிறது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.