
நடிகை திரிஷா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய், அஜித் என தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் தான் நடித்து வருகிறார். அடுத்து சூர்யா 45 உள்ளிட்ட பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். கடைசியாக அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை எடுத்துக் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் வெளியாக ரெடியாக இருக்கிறது.
இந்த நிலையில் காதலர் தினமான நேற்று திரிஷா போட்டிருக்கும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சில வாரங்களுக்கு முன்பு திரிஷா நாய் Zorro மரணம் அடைந்தது. அது குறித்து சோகமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய குழந்தை இறந்து விட்டதாக பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு கூறி வந்தார்கள். இந்த நிலையில் தன்னுடைய புது valentine என்று குறிப்பிட்டு தன்னுடைய புது நாய்க்குட்டியை அறிமுகம் செய்திருக்கிறார். அவர் தன்னுடைய புது நாயக்கட்டிக்கு Izzy என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
View this post on Instagram