பொதுவாகவே பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம் தான். ஆனால் அதற்கு மாறாக பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் லோஹர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது.

அப்போது அந்தப் பாம்பை திருப்பி கடித்தால் தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்ற மூடநம்பிக்கையால் சந்தோஷ் தன்னை கடித்த பாம்பை பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பிறகு சந்தோஷ் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகு உடல் நலமடைந்து மறுநாள் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்.