தமிழ் சினிமாவின்முன்னணி இசையமைப்பாளர்களுள்  ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த திரைப்படம் வெயில். இதனை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்த நிலையில் இவர் செல்வராகவன் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை அடிமையா வச்சிருந்தாங்க ஸ்டூடியோவில்.

என்னால் மறக்கவே முடியாது. நான்கு நாள் ஸ்டூடியோவில் கிடந்தேன். செல்வராகவும் போக மாட்டேன் சொல்லிவிட்டார். தயவு செஞ்சு போங்க நான் வாசித்து வைக்கிறேன். தயவு செஞ்சு போங்க அப்படின்னு சொன்னேன். செல்வராகவன் போகவே மாட்டார். நான் இங்கதான் இருப்பேன் என்று சொல்வார். நீ வாசி அப்படின்னு இருப்பார் என்று கலகலப்பாக பேசியிருக்கிறார்.