
கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சூர்யாவும் ஹரிஹரன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.
இதனை அறிந்த சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளை துடியலூர் அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் இருக்கும் உறவினர் சுப்பிரமணியன் வீட்டில் நான்கு நாட்களாக அடைத்து வைத்துள்ளார்.
அவரது செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டு வெளி உலக தொடர்பை துண்டித்தனர். ஒரு கட்டத்தில் உறவினரின் செல்போனில் இருந்து சூர்யா நடந்த விஷயத்தை ஹரிஹரனுக்கு கூறியுள்ளார்.
ஹரிஹரன் காவல்துறையின் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். இதனால் பெண் தரப்பினரையும், ஹரிஹரன் தரப்பினரையும் விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.