விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அதன்படி விஜய் டிவியில் அது இது எது மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கம். ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தாண்டி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் நாஞ்சில் விஜயனும் மரியாவும் ஒரு youtube சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளனர்.

அதில் பேசிய நாஞ்சில் விஜயன் மனைவி மரியா, இவர் என்னை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவருடைய வயது சொல்லவே. ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும், என்னை பெண் பார்க்க வந்த போது கூட இவர் தலை மீசையெல்லாம் வெள்ளையாக தான் இருந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர் சாயம் விழுந்தது. தலை முழுவதும் வெள்ளை முடி தான் என்று தனது கணவர் குறித்து மரியா நகைச்சுவையாக பேசியுள்ளார்.