விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியாக இருந்த நிலையில் அனைவருடைய மனதையும் வென்று டைட்டில் வின்னராக மாறுவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவருடைய வெற்றி வாய்ப்பானது அசீமின் பக்கம் சாய்ந்தது.

வெளியே வந்த இவர் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில்  பிக்பாஸ் விக்ரமன் குறித்து கிருபா முனுசாமி என்ற பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார். தன்னை காதலிப்பதாக கூறி மனரீதியான மற்றும் உடல் ரீதியாக தாக்கியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும், அதே போல் தன்னிடம் பல லட்சங்கள் பணத்தை மோசடி செய்ததாகவும். சுயசாதி பெருமையை பேசி, சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திருமாவளவனுக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.