
மனித பற்கள் ஒரு “ஆபத்தான ஆயுதமாக” வகைப்படுத்தப்பட முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமண உறவுகளில் ஏற்பட்ட மோதலில், மாமியாரின் சகோதரி பற்களால் தன்னை காயப்படுத்தினாள் என கூறி வழக்கு பதிவு செய்த பெண்ணின் புகாரை நீதிமன்றம் நிராகரித்து, பதிவு செய்யப்பட்ட எப்பிஐஆரை ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவா கங்கன்வாடி மற்றும் சஞ்சய் தேஷ்முக் ஆகியோர், சம்பந்தப்பட்ட மருத்துவ சான்றிதழ்களில் சாதாரண பற் காயங்கள் மட்டுமே இருந்ததாகவும், அது படுகாயமோ உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையிலானதோ அல்ல என்று தெரிவித்தனர். மனித பற்கள், IPC பிரிவு 324-இன் கீழ் குறிப்பிடப்படும் வகையில் உயிருக்கு ஆபத்தான ஆயுதமாக கருதப்பட முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், புகாரளித்தவருக்கும் குற்றச்சாட்டை சந்தித்தவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், அதுதான் பிரச்சனையை உருவாக்கிய காரணமாக இருக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, குற்றவாளிக்கு எதிரான வழக்கை தொடர்வது சட்டத்தின் தவறான பயன்படுத்தலைக் காட்டும் எனக் கூறி, புகாரையும் அதன்படி பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்தது.