தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஹீரா. இவர் கமல்ஹாசன், முரளி, அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹீரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக பகிர்ந்த பதிவு வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அஜித்தை தான் மறைமுகமாக பெயரைக் குறிப்பிடாமல் ஹீரா குறிப்பிட்டதாக பலரும் கூறுகிறார்கள்.

அதாவது காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் ஹீரா நடித்த நிலையில் இருவரும் காதலித்ததாகவும் பின்னர் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை ஹீரா வெளியிட்டுள்ள  பதிவில், நான் ஒரு நடிகருடன் நீண்ட காலம் உறவில் இருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் கடைசியில் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்.

அவர் இந்த விஷயத்தை ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி வேறொருவர் மூலமாக எனக்கு சொன்னார். நான் இது உண்மையாய் என அவரிடம் கெஞ்சி கேட்டு அழுதேன். அதற்கு அவர் நான் வேலைக்காரி மாதிரி இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன். அவளை யாரும் பார்க்க மாட்டார்கள். நான் விருப்பப்பட்ட மாதிரி அந்த பெண்ணுடன் வாழ்வேன் என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி நான் போதை பொருளை பயன்படுத்தியதாக அந்த நடிகர் என்னைப் பற்றி கூறி மக்கள் மத்தியில் என் பெயரை கெடுத்துவிட்டார். அவர் தனக்கு ஆப்ரேஷன் நடந்தது என்று தற்போது கூறுவதெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் அவருடைய கஷ்ட காலங்களில் இரவு பகல் பாராமல் அவருடன் இருந்த நிலையில் அவர் என்னை விட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் அஜித் பத்மபூஷன் விருது வாங்கினார். இந்த நிலையில் அவர் அஜித்தை விமர்சித்து இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் சுரேஷ் சந்திராவை டேக் செய்து இந்த பதிவை வெளியிட்டு வரும் நிலையில் இதுவரை விளக்கம் வரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.