கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுத்ததால் எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து உண்ணாவிரதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, சட்டப்பேரவையில் நான் பேசுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தால் ஆளுங்கட்சியினரை கிழி கிழி என்று கிழித்திருப்பேன். கள்ளக்குறிச்சி விவகாரம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் இதுகுறித்து பேச ஏன் மறுக்கிறார்கள்? இது குறித்து பேசக்கோரிய எங்களையும் வெளியேற்றி விட்டார்கள் என்று பேசியுள்ளார்.