
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில் திடீரென நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுவன் எழுதிய ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனக்கு முடி உதிரும் பிரச்சினை இருக்கிறது. அளவுக்கு அதிகமாக முடி கொட்டுவதால் என்னை பார்ப்பதற்கு எனக்கே அசிங்கமாக இருக்கிறது. எனவே வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.