
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அவிகா கோர். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பாலிகா வது என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை அவிகா கோர் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் கஜகஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பின்னால் இருந்து யாரோ என்னை தவறான முறையில் தொட்டது போல் இருந்தது.
நான் திரும்பி பார்த்தபோது பாதுகாவலர் மட்டும்தான் என் பின்னால் இருந்தார். இதேபோன்று நான் மற்றொரு முறை மேடையில் ஏற முயன்ற போது ஒருவர் என்னை தொட முயன்றார். நான் அவரை தடுத்து விட்டேன். நான் திரும்பி பார்த்தபோது பாதுகாவலர் மட்டும் தான் இருந்தார். பின்னர் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் நான் இருவரையும் தண்டிக்கவில்லை. எனக்கு அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது தைரியம் ஆகிவிட்டேன். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று நம்புவதாக கூறியுள்ளார்.