
டெல்லி கேபிடல்ஸ் அணி மைதானத்தில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டூபிளசிஸ் உட்கார்ந்து இருக்கிறார். அவருடைய கழுத்தில் தூக்குக் கயிற்றை கட்டி இறுக்கி மிரட்டும் தோனியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவருக்கு பின் பக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்ஷர் படேல் கையில் குத்துச்சண்டை கையுறையோடு நிற்கிறார்.
View this post on Instagram
அவருக்கு பக்கத்தில் ஸ்டப்ஸ் பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கிறார். இவர்கள் மூன்று பேரும் டூப்பிளஸை மிரட்டும் தோனியில் இருக்கிறார்கள் . இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ‘தீவிரமான’ சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட ஃபாஃப் டு பிளெசிஸுக்கு வேறு வழியில்லாமல், அவர் எழுதிய வாக்குமூலத்தைப் படிக்க வேண்டியிருந்தது, “ஹாய், என் பெயர் ஃபாஃப் டு பிளெசிஸ், நான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர். டெல்லி கேபிடல்ஸ் எனக்கு மிகவும் பிடித்த அணி. உண்மையில், அது உலகிலேயே சிறந்த அணி என்று பேசுகிறார்.