
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உப்பத்தி பகுதியில் டேனி பால் என்பவர் வசித்து வருகிறார். அவர் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். நேற்று முடிந்தனம் டேனி பால் உப்பட்டி பகுதியில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவிகளை காரில் அழைத்து சென்றார்.
ஒரு மாணவியை அவரது வீட்டில் இறக்கி விட்ட பிறகு மற்றொரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடம் இருந்து அந்த மாணவி தப்பித்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் மாணவியை பத்திரமாக மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் டேனி பாலை கைது செய்தனர்.