பொதுவாக சுட்டிக் குழந்தைகள் செய்யும் செயல்கள் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அதேபோன்றுதான் விலங்குகள் செய்வதும் இருக்கும். இதன் காரணமாகத்தான் வீட்டில் பலர் செல்ல பிராணியாக விலங்குகளை வளர்க்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலும் தங்கள் தாயை தேடும். அதேபோன்று விலங்குகளும் அப்படித்தான் தன் தாயில்லாமல் இருக்காது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது கேரளாவில் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள திருநெல்லி தோள்பேட்டை பகுதியில் வனப்பகுதி ஒன்று உள்ளது. இந்த வனத்திலிருந்து நேற்று முன்தினம் குட்டி யானை ஒன்று வழி தவறி சாலைக்கு வந்துவிட்டது.

அந்த குட்டி யானை அவ்வழியாக சென்ற ஒவ்வொரு வாகனத்தின் முன்பாகவும் நின்று  வழிமறித்தது. அந்த குட்டி யானை எந்த ஒரு  வாகனத்தையும் விடாமல் தேடிய நிலையில் தன் தாய் அதில் இருக்கிறதா என்று தேடி தேடி பார்த்தது. அந்த வாகனங்கள் அங்கிருந்து கிளம்பி சென்ற  போது அந்த குட்டி யானை தன் தாயை தேடி பின்னால் ஓடியது. இதனைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்களுக்கு பரிதாபம் ஏற்பட்டது. அந்த குட்டி‌ யானை நீண்ட நேரமாக தன் தாயை காணாமல் தவித்த நிலையில் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருவது ஒரு தாய் யானையுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.