பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‌ நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், நடிகைகள் தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் இடம் பெற்ற ஒரு கிராபிக்ஸ் காட்சி காப்பி அடிக்கப்பட்டது என்று தற்போது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. அதாவது தென்கொரியா நாட்டைச் சேர்ந்த கிராபிக்ஸ் கலைஞர் சங் சோய். இவர் டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தன்னால் 10 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சியை என்னுடைய அனுமதி இல்லாமல் கல்கி பட குழுவினர் பயன்படுத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளதோடு அவர் உருவாக்கிய கிராபிக்ஸ் காட்சியையும் ட்ரைலரில்  இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சியையும் வெளியிட்டுள்ளார். மேலும் இது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி படத்திற்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.