உத்திரபிரதேசம் மாநிலம் கோட்வாளி காவல் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பூர்தி குப்தா என்ற 24 வயது இளம்பெண்ணின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் மகளை கொலை செய்ததாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணை அவருடைய தந்தை சஞ்சய் குப்தா கொலை செய்தது தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் தந்தை மகளுக்கு 600 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திரும்பத் தருமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு மகள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சஞ்சய் இரவில் தூங்கிக் கொண்டிருந்த மகளை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்தும் அந்தப் பெண்ணின் தந்தை போலீசில் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சய் குப்தா மற்றும் வந்தனா குப்தாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.