
தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக காஜல் அகர்வால் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செல்ஃபி எடுப்பதற்காக அவரை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களிடம் காஜல் அகர்வால் கோபமடைந்துள்ளார். அவர் “என்ன இதெல்லாம்” என கைகளால் கேட்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Fan/random Guy Misbehaving with actress #KajalAggarwal in a event🙄🙄 pic.twitter.com/I68WdTbxLl
— Movies & Entertainment (@Movies_Ent_) March 6, 2024