
நடிகை மாளவிகா மோகனா நடிப்பில் கடந்த ஆண்டு தங்களன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகன் சமீபத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக் கொள்வார்கள்.
அவர்கள் சரியான நேரத்தில் முகமூடி அணிந்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தன்னை புத்திசாலி என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஏன் இந்த பாசாங்குத்தனம். ஆண் என்றால் ஒரு மாதிரியும் பெண் என்றாலும் ஒரு மாதிரியா பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தான் தெரியவில்லை என கூறியுள்ளார்.