
ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் போட்டியானது சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது.
Easy Sanju Samson, you played well. #PBKSvsRR #PBKSvRR #RRvPBKS #RRvsPBKSpic.twitter.com/qGmHrDqIDt
— CricChat (@CrickettChat) April 5, 2025
நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றியை குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரங்களில் ஆட்டத்தை இழந்தார். அப்போது கோபத்தை பேட்டை தூக்கி வீசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.