தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நீங்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.  கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, 2026 இல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் பாஜகவினர் தெளிவாக இருக்கின்றனர். வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இயக்கம் தான் திமுக. பட்டப்பகலில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்தி மொழி திணிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் கூறுகின்றார்.

மூன்றாவது முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ் கெட்டு விட்டது. தமிழ் படிப்போரின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் நடத்தக்கூடிய சொந்த பள்ளியில் இந்தி திணிக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களே நல்லா கேட்டுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் 2026 இல் நீங்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அதுவரை நீங்கள் குட்டிக்கரணம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மனிதன் எந்த வேலையும் இல்லை என்றால் எதையும் செய்ய துணிவார்கள் என்பதற்கு உதாரணமாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.