
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை படுத்து இருக்க சிறுவன் ஒருவன் அவரது காலுக்கு மசாஜ் செய்து விடுகிறான். இந்த சமயத்தில் மற்றொரு ஆசிரியையும் வகுப்பில் தான் இருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவரா இத்தகைய செயல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என்றும் அந்த ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த காணொளி வைரலான நிலையில் நெட்டிசன்கள் தங்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் பல்வேறு கருத்துக்களாக வெளியிட்டு வருகின்றனர்.