சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துவரும் சுருதி நாராயணன் சினிமாவில் ஹீரோயின்  ஆக அறிமுகமாகியுள்ளார். ரங்கராஜன் இயக்கியிருக்கும் கட்ஸ் என்ற படத்தின் ஹீரோயின்களில் ஒருவர்தான் இவர். சென்னையில் நடந்த கட்ஸ் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இந்த பட வாய்ப்பு கொடுத்த  இயக்குனர் ரங்கராஜ் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் செகண்ட் ஹீரோயினாக நடித்துள்ளேன். கேரக்டர் என்பது கதைக்கு ஏற்றது போல மாறும். இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ஆக என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை,

எனக்கு ஆதரவாக இருந்து எனக்கு என்ன பண்ண வேண்டும்? எப்படி பண்ண வேண்டும் என எல்லாத்தையும் கற்றுக் கொடுத்த ரங்கராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஏன்னா எனக்கு இது புதுசு. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என்னைவிட மிகவும் பர்ஃபெக்டாக எனக்கு இயக்குனர் கற்றுக் கொடுத்தார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.. ஸ்ருதி நாராயணன் இந்த பேச்சை பார்த்த ரசிகர்கள் செகண்ட் ஹீரோயின் சான்ஸ் நல்லது தான். ஆனால் கவனமாக இருக்க வேண்டும் சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றால் காணாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. அடுத்ததாக ஹீரோயினாக முயற்சி செய்யவும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.