
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். சமீபத்தில் ஒரு சிறுமி காவல் நிலையத்திற்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் சிறுவன் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இருப்பினும் விசாரணைக்கு அழைத்த மேலும் சில வாலிபர்களை விடுவிக்க விஜயலட்சுமி 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்ப, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, எட்டு சிவசக்தி ஆகியோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜெயலட்சுமி, சிவசக்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.