
மதுரையைச் சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அந்த இளம் பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சித்திக் ராஜா அந்த இளம்பெண் வேலை பார்க்கும் கடைக்குள் புகுந்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்திக் ராஜாவை கைது செய்தனர். அவர் போலீஸ்காரிடமிருந்து தப்பி ஓடும்போது கை முறிந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.