கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகம்மாள். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். பெருமாளின் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. டெம்போ டிரைவரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவருக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.

நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நாகம்மாள் தனது மகனின் அறையை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் தூக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்க அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.