
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் உபாசா புகான்(28) என்ற இளம்பெண் தனது தாயாருடன் வசித்து வந்தார். முன்னாள் மந்திரியான பிரிகு குமாரின் மகள் தான் உபாசா புகான். கடந்த 2006 ஆம் ஆண்டு உபாசா வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உடனடியாக உபாசாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே உபாசா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் உபாசா மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதற்கு முன் உபாசா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் கூறினர்.
ஆனால் இது இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உபாசா இறந்ததற்கான தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்காததால் மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.