
மகாராஷ்டிரா மாநிலம் கன்சோலியில் நவி மும்பை மாநகராட்சி பள்ளியில் ஆயுஷ் தர்மேந்திரா சிங் (14) என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் ராய்காட் மாவட்டம் கோபோழலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு சக மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் பயணத்தின் போது அசௌகரியமாக இருந்ததால் தர்மேந்திரா சிங் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அமர்ந்தபடியே தர்மேந்திரா சிங் திடீரென தரையில் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் தர்மேந்திரா சிங்கை மீட்டு ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது தர்மேந்திரா சிங்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெறிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தர்மேந்திர சிங் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதியானது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பால் மாணவர் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.