10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை த.வெ.க தலைவர் விஜய் இன்று  நடத்தினார்.   இதில் ஏராளமான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை பாராட்டி நாதாக தலைவர் சீமான் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கல்வியில் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில் ஏழை பணக்காரன் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் கல்வி சிறந்து விளங்கும் மாணவ மாணவியர் அழைத்து விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ்களோடு உயர்கல்விக்கான உதவி தொகையும் வழங்கி ஊக்கப்படுத்தும் உன்னதப் பணியை செய்யும் என்னுயிர் இளவல், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் என் அன்பு தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.