தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் பிசியான நடிகர் தான் பிரித்விராஜ். இவர் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குடும்பத்தில் உள்ள அனைவருமே திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவருக்கு மலையாளத்தில் பெரிய அளவு வரவேற்பு இருந்தது. பிரித்திவிராஜ் மலையாளத்தில் நந்தனம் என்ற படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் . அதன் பிறகு 2006ம் வருடம் மலையாளத்தில் கிளாஸ்மெட் என்ற படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் பிரதிவிராஜ் தன்னுடைய அப்பாவின் இறப்பு குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “என்னை பொறுத்தவரை பிரபலங்கள் மறைந்த பிறகும் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனுமதிப்பதில் எனக்கு விருப்பமில்லை. இதன்படி என்னுடைய அப்பா இறந்தபோது மலையாள சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் வந்திருந்தார்கள். அப்போது என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த மனம் வருத்தத்தில் இருந்தனர். அந்த சமயம் மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் வரும்போது கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய குடும்பத்தினரின் மனநிலை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார்கள்” என்று பேசியுள்ளார்.