உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே.

ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு சென்று என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனிடம் விசாரித்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.

அதாவது சிறுவனின் தந்தை இக்பால் காத்ரி தனது மகனை சாலைக்கு செல்லவும் ஆற்றுக்கு செல்லவும் அனுமதிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் தனது தந்தை ஊரில் இல்லாத சமயத்தில் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து விட்டார்.

“என் அப்பா என்னை சாலைக்குப் போகக்கூடாது ஆற்றுக்குப் போகக்கூடாது என தடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்க” என்று சிறுவன் கொடுத்த புகாருக்கு காவல்துறையினர் நாங்கள் விசாரிக்கிறோம் என்று கூறிய பிறகு தான் ஹசனைன் நிம்மதியாக உணர்ந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஏராளமானோர் சிறுவனின் தந்தையை தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளனர்.