நடிகை சாய் பல்லவி திருமணம் குறித்து சமீபத்தில் வெளியிட்ட பேட்டி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் பிரபலமான சாய் பல்லவி, தமிழ் சினிமாவிலும் ‘தியா’, ‘மாரி 2’ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் அவருடைய தங்கை பூஜாவிற்கு படுகர் முறைப்படி திருமணம் நடந்தது.

இந்நிலையில் சாய் பல்லவி தன் அப்பாவிடம் திருமணம் பற்றிய கருத்துகளை வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், “என் கிராமத்தில், கலாச்சாரத்தின் அடிப்படையில் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், கலாச்சாரத்திற்காக என் விருப்பத்திற்கு எதிரான முடிவுகளை எடுக்க முடியாது,” என அவர் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் சமுதாயத்தில் படுகர் சமுதாயத்தை தவிர்த்து வேறு இனத்தவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களை திருமணம், இறுதி சடங்கு உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள விடாமல் தள்ளி வைப்பார்கள். இதனால்தான் என் அப்பா அப்பாவியாக படுகர் இனத்தை சேர்ந்தவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக அவர் கூறியுள்ளார்.