
என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்றுக்கொடுக்காமல்
விட்டுவிட்டார்’ என நடிகை சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ‘சாகுந்தலம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, ‘மலையாளத்தில் உள்ள ஒவ்வொரு நடிகர்களும், தனித்தன்மை வாய்ந்த நடிகர்களாக உள்ளனர். எனக்கு சில நேரங்களில் ஒரே மாதிரியாக நடிக்கிறோமோ என தோன்றினால் மலையாளப் படங்களை பார்த்து புதிதாக கற்றுக்கொள்வேன்’ என்றார்.