தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியும் கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்து என் உயிரினும் மேலான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் முறையே பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டியது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அன்பகம், 614 அண்ணா சாலை, தேனாம்பேட்டை சென்னை 600018 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் உள்ள `விண்ணப்பம்’ பகுதியில் உங்கள் விவரங்களைத் தந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் முதல்கட்டத் தேர்வில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.07.2024 என அறிவிக்கப்பட்டுள்ளது.