
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமாக அறிமுகமானவர் நடிகை நமீதா. இதனை தொடர்ந்து இவர் பம்பரக்கண்ணாலே, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, இளமை ஊஞ்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் .விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதற்கிடையில் இவர் 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இவர், நான் கர்ப்பமான விஷயத்தை முதலில் அப்பா கிட்ட தான் சொன்னேன். பீரியட்ஸ் மிஸ் ஆனதால் பிரக்னன்சி டெஸ்ட் பண்ணினேன். அப்போ பாசிட்டிவ்வானதும் ஹேப்பி ஆகிவிட்டேன். இந்த விஷயத்தை அப்பா கிட்ட சொன்னதும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
அந்த நேரத்தில் சூரத்தில் இருந்த என் கணவர் இதை கேள்விப்பட்டதும் அடுத்த நாளே வந்துவிட்டார். என்னோட முதல் குழந்தை நான்கு மாதத்தில் கலைந்து விட்டது. இதைப்பற்றி முதல் இரண்டு மாதம் எனக்கு சுத்தமா தெரியவில்லை. அப்புறம் போக போக தான் தெரிந்தது. என்னோட முதல் குழந்தை கலைஞ்சிடுச்சு என்று வேதனை தெரிவித்துள்ளார்.