
சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் ஞான சித்தனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தாம்பரம் மாநகராட்சியில் லாரி ஓட்டுனராக பணிபுரிகிறார்.
இதில் ஞான சித்தன் அடிக்கடி பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் பாக்யலட்சுமிக்கு வேறு சில நபர்களுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இது ஞான சித்தனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் பாக்கியலட்சுமி கண்டிதத்தோடு தன்னுடன் மட்டும் தான் பழக வேண்டும் என்றும் மற்றவர்களுடன் பழகக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு ஞான சித்தன் பாக்யலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய இரு குழந்தைகளையும் பாக்கியலட்சுமி வேர் அறையில் தூங்க வைத்தார்.
பின்னர் இருவரும் ஒரு அறையில் மது குடித்த நிலையில் உல்லாசமாக இருந்தனர். அப்போது பாக்கியலட்சுமியிடம் அவர் தன்னுடன் மட்டும்தான் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் வேறு நபர்களுடன் பழகக் கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு பாக்கியலட்சுமி மறுத்ததால் கோபத்தில் கல்லால் அடித்து அவரை கொலை செய்தார். பின்னர் அவர் தானாகவே சென்று போலீசில் சரணடைந்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.