உங்கள் காலுக்கு என் தோலை செருப்பாக தைத்து போட்டால்கூட போதாது. சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என நிச்சயமாக சொல்வேன் என நடிகர் விஜய் உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், ‘இலக்கும் கனவும் பெரிதாக இருக்க வேண்டும். எதை ஜெயிக்க முடியாதோ அதை ஜெயிக்கனும் அதான் முக்கியம். நம் இலக்கும், கனவும் பெரிதாக இருக்க வேண்டும். சோசியல் மீடியால கோவப்படாதீங்க. அப்யூஸ் பன்னாதீங்க. ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு.

காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தல் வில் அம்போட போய் முயல பிடிச்சுட்டு இருந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட வந்து யானைக்கு குறி வச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க’ என்றார்.