
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் ஜெபராஜ் என்ற மாணவன் வசித்து வந்தார். கடந்த 21-ஆம் தேதி ஜெபராஜ் தனது நண்பர்களுடன் நந்தன்குளம் பாலத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ஜெபராஜ் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தங்களை வீட்டில் விட்டுவிட்டு ஜெபராஜ் மட்டும் தனியாக சென்றதாக நண்பர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபராஜின் பெற்றோர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஜெபராஜின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.