சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்குமார்- கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் புனிதவேல். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமாரின் நிலத்தில் இருந்த மின் மோட்டார் பழுதானது. இதனால் பக்கத்து விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாசனம் செய்வதற்காக செந்தில்குமார் புனிதவேலிடம் மின் மோட்டார் ஸ்விட்ச்சை ஆன் செய்யுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் மின் மோட்டாரை ஆன் செய்தவுடன் புனித வேலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு புனிதவேல் படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு புனிதவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.