
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ராகவலு- ரமாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் பிரவீன். கடந்த 2023 ஆம் ஆண்டு உயர் கல்வி படிப்பதற்காக பிரவீன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு மில்வாகி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். படிக்கும்போதே பிரவீன் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்த பிரவீன் மீண்டும் ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு திரும்பி சென்றார்.
இந்த நிலையில் பிரவீன் பகுதி நேரமாக வேலை பார்க்கும் கடைக்குள் திருடர்கள் புகுந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பிரவீன் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் இறந்த செய்தி கேட்டு பிரவீனின் பெற்றோர் நிலைகுலைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.