
திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்பநல்லூரில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை மரத்தின் ஓலைகள் விழுந்து மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது.
காலை வரை மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில், ஆறு வயது சிறுவன் மாதேஷ் எதிர்பாராதவிதமாக மின்சார கம்பியை மிதித்தான். இதனால் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்த மாதேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.