
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆதிஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆதிஸ்வரன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடுமையாக தாக்கி மிரட்டியதால் தான் ஆதீஷ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அரை மணி நேரம் கழித்து அங்க போக்குவரத்து சீரானது.