
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு சிறிய விஷயங்களுக்கு கூட அடிக்கடி சண்டை போட்டு வந்தார்கள். இந்நிலையில் அந்த இளம் பெண் தன் கணவரிடம் புதிதாக சேலை வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்த நிலையில் தொடர்ந்து சேலை கேட்டு கணவரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனாலும் அவர் கணவர் வாங்கி கொடுக்காததால் கோபத்தில் அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது புடவை வாங்கிக் கொடுக்காததால் கணவர் மீது புகார் கொடுத்துள்ளதோடு அவரை ஜெயிலில் அடைக்குமாறு கூறியுள்ளார். அதோடு உடல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதோடு அந்த கணவரிடம் மனைவிக்கு சேலை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து தன் மனைவிக்கு அந்த வாலிபர் புடவை வாங்கி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்சனை முடிவடைந்து சமாதானமாகி வீட்டிற்கு சென்றனர்.